திருநெல்வேலி – பிப் -10,2023
Newz – webteam
திருநெல்வேலி மாநகரில், கைபேசியில் உள்ள ‘டேட்டிங் ஆப்’, ‘கிரைண்டர் ஆப்’ போன்ற செயலிகள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு “உல்லாசமாக இருக்கலாம்” என்ற பெயரில் ஆசையைத் தூண்டி ஒதுக்குப்புறமான இடத்திற்கு கூட்டிச்சென்று, வழிப்பறியில் ஈடுபடுவதன் மூலம் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த “கணினிவெளிச் சட்டக்குற்றவாளியான முத்து, ஆண், வயது 24/2023 என்பவர் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர், கிழக்கு, திரு.வீ.இரா.ஸ்ரீனிவாசன், மேலப்பாளையம் சரக காவல் உதவி ஆணையாளர் K.C.சதீஷ்குமார் மற்றும் பெருமாள்புரம் (குற்றம்) காவல் நிலைய காவல் ஆய்வாளர் பூ.ஜெயலெட்சுமி ஆகியோரின் பரிந்துரையின் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர், .சு.இராஜேந்திரன். பேரில் இகாப. உத்தரவின்படி 10.02.2023-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.