திருச்சி – பிப் -01,2023
Newz – webteam
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்
(Aerodorme Committee Members Meeting) இன்று 31.01.2023-ந்தேதியன்று காலை 1100 மணிக்கு விமான நிலைய குழுவின் தலைவர் / திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா, இ.கா.ப., தலைமையில் விமான நிலைய இயக்குனர் P.சுப்பிரமணி திருச்சி பள்னாட்டு விமான நிலைய கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது.
இந்த குழுவில் விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு படை, குடியேற்ற பணியகம், சங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சி, மக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகளை உறுப்பினர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர்களை கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை மற்றும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை சம்பந்தமாக கலந்து ஆ லோசிக்கப்பட்டது.மேலும்இக்கூட்டம்
நடத்தப்பட்டதாள்மூலம்அனைவருக்கும்
பயனுள்ளதாக இருந்ததாக திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துக்கொண்டார்