திருச்சி – பிப் -01,2023
Newz – webteam
தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் தலைமையில்
திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் Dr.C.சைலேந்திரபாபு, இ.கா.ப., தலைமையில் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்றகலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மண்டல காவல்துறை தலைவர்.G.கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா, இ.கா.ப., திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் A.சரவனசுனனந்தர், இ.கா.ப., திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல்துறை இயக்குநர் கலந்து கொண்டு பேசுகையில், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாத்து, ரோந்து பணி செய்யவும், குற்றவாளிகள், கெட்ட நடத்தைகாரர்கள் மீது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், கஞ்சா மற்றும் போதை பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கவும், மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் முதல்வரின் முகவரி மனுக்கள், பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் மனுக்களின் மீது துரித விசாரமண செய்ய காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் தற்போது காவல்துறையில் நவீனமயமாக்கப்பட்ட பல சேவைகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலில் உள்ளது. அதில் கீழ்கண்ட சேவைகள் முக்கியதுவம் பெற்றவை.ஸ்மார்ட காவலன் செயலி ரோந்து செல்லும் காவலர்களுக்கு மிக உபயோகமாக உள்ளது. அதை அதிகளவில் காவலர்கள் உபயோகப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் FACE REGOGNIZATION SOFTWARE (FRS) APP மூலம் சந்தேக நபர்களின் முக அடையாளங்களை ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ள குற்றவாளிகளின் முக அடையாளங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் உதவி செயலியை காவல் உதவி செயலி கல்லூரி மாணவ மாணவிகளிடமும், வேலைக்கு செல்லும் இளம்பெண்களிடமும் இதை பயன்படுத்தும் முறை மற்றும் இதன் பயன்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு இந்த காவல் உதவி APP பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்த வேண்டுமென்றும், TRACKED HS APP மூலம் கெட்டநடத்தைக்காரர்களின் தகவல்களை ஒப்பிட்டு அவர்களை தணிக்கை செய்ய வேண்டும் எனவும், ROAD SAFETY PORTAL மூலம் அதிகமாக விபத்து நடைபெறும் இடங்கள் (Hotspot) மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து தீர்வு காணவும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
ரோந்து செல்ல இடர்பாடான இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்டறிய DRONE CAMERA மூலம் கண்காணித்து குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மைக்ரோவேவ் சும்மியூகேசன் செயலி காவல்துறையில் பல்வேறு செயல்பாடுகள் நடக்கிறது என்றும், காவல்உதவி செயலி மூலம் பொதுமக்களுக்கு 56வகையான உதவி செய்யப்படுகிறது என்றும், செல்போள் மூலம் பணம்பட்டுவாடா செய்து ஏமாந்தவர்களுக்கு சைபர்கிரைம் செல் செயல்படுகிறது என்றும், காவல் நிலையங்களில் இ-ஆபீஸ் மூலம் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படுகிறது என்றும், தற்போது நவீனமயமாகிவரும் உலகில் காவல்துறை பணிகளையும் நவீனமயப்படுத்தும் வகையில் மேற்படி செயலிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பாக பணிபுரியவேண்டும் என அறிவுறுத்தினார்கள். சிறப்பாக செயல்பட்ட திருச்சி சரகம் மற்றும் திருச்சி மாநகரில் உள்ள ஏழு
குழுக்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள், கலந்தாய்வு கூட்டம் முடித்த பிறகு திருச்சி மாவட்டம் தூவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) இந்தியாவின் முதன்மையான கணிணியில் ஆராய்ச்சி நிறுவனமான, இந்திய அரசின் தொழில்நுட்பதுறை, தொழில்நுட்பம் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் உயர்தொழில்நுட்ப தீர்வுகளை வடிவமைத்து உருவாக்கி செயல்படுத்தி வரும் C-DAC (Centre for Development of Advanced Computing) நிறுவனமும் தேசிய தொழில்நுட்ப கழகமும், இணைந்து அவரசு காலங்கள் மற்றும் பேரிடர் காணங்களில் மக்களையும் உயிரினங்களையும் காப்பற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் அவரச கால தொடர்பு மற்றும் சேவைக்கான சிறப்பு ஆராச்சி மையம் (Centre of Excellence in Emergence Response Support System) (COEERSS) துவக்க விழா நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார்கள். இச்சேவைக்கான அவசர கால தொடர்பு எண் 112 ஆகும். இந்த தொடர்பு பல்வேறு இயற்கை சீற்றங்கள், பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பு மற்றும் தேவையான உதவிகளை (காவல்துறை, தியணைப்பு துறை, சுகாதாரத்துறை) ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்பாடுகளை மேற்பார்வையிடல் பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் இரயில்வே பெண்கள் குழந்தைகள் உதவி எண்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது.