83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 6,உதவி ஆய்வாளர்கள் உட்பட 40,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி...

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 6,உதவி ஆய்வாளர்கள் உட்பட 40,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு‌…..

தூத்துக்குடி – பிப் – 25,2023

Newz – webteam

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 6 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 40 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கங்கைநாத பாண்டியன், பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. செல்வம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கதிரேசன் ஆகியேரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் மற்றும் தங்க செயினை பறித்து சென்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவல்லநாடு பகுதியில் பதுங்கி இருந்த எதிரிகள் 3 பேரை கைது செய்து திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்த முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அந்தோணிராஜ், பெண் தலைமை காவலர் திருமதி. தனலெட்சுமி, முதல் நிலை காவலர் திரு. சதீஷ் தணிகை ராஜா, காவலர்கள் திரு. மகேந்திரன், திரு. முகம்மது கோரி, திரு கந்தசாமி மற்றும் பெண் காவலர் செல்வி. சரவணபிரியா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 4 கொலை வழக்குகள் உட்பட 35 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை துரிதமாக செயல்பட்டு கைது செய்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜா ராபர்ட், ஏரல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குணசேகரன், சாயர்புரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. கைலயங்கிரிவாசன், சேரகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. ஆனந்தராஜ், ஏரல் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. நாராயணசாமி, காவலர் திரு. ஜான் அந்தோணி ராஜ் மற்றும் ஸ்ரீவைகுண்ட காவல் நிலைய காவலர் திரு. பட்டவராயன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை சென்னையில் வைத்து கைது செய்து அவர்களிடமிருந்த வழக்கின் சொத்தான ரூபாய் 4,52,000/- பணத்தை மீட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாதவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, தலைமை காவலர் திரு. முருகன் மற்றும் காவலர் திரு. சுரேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட 3 எதிரிகளை கைது செய்து சொத்துக்களை கைப்பற்றி நிலையத்தில் ஒப்படைத்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அரிக்கண்ணன், காவலர்கள் சரவணக்குமார் மற்றும் சிவா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நின்று கொண்டிருந்த லாரி மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்களிலிருந்து பேட்டரிகளை திருடிய 2 எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 72,000/- மதிப்பிலான 7 பேட்டரிகளை கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் . பூபதி ராஜா, காவலர்கள் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் கருப்பசாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் உள்ள வழக்குகளை கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தின்போது 142 வழக்குகளை முடித்து சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் . வில்சன், முதல் நிலை காவலர் . ஜஸ்டின் பிரபாகரன், காவலர்கள் சதீஷ்பாலா மற்றும் . முத்துராமலிங்கம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் 9 எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்ய காவல் ஆய்வாளர் அவர்களுக்கு உதவியாக இருந்த சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. பொன்பாண்டி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த கொலை, கொலை முயற்சி, திருட்டு உட்பட 8 வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து நிலையத்தில் ஆஜர் செய்து விசாரணை அதிகாரிக்கு உதவியாக இருந்த தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

திருச்செந்தூர் மார்க்கெட் பகுதியில் சற்று மனநலம் பாதித்தவர் போல இருந்த நபரை பார்த்து அவரை விசாரித்துபோது அவர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒருவரின் புகைப்படத்துடன் ஒத்துப்போவதை கண்டறிந்து மேற்படி நபரை திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து கேரள மாநில காவல் நிலைய அதிகாரி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்த திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் முதல் நிலை காவலர் திருமதி. கவிதா என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஆத்தூர் காவல் நிலையத்தில் நீதிமன்ற விசாரணையில் இருந்தவந்த கொலை முயற்சி வழக்கின் எதிரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 12,000/- அபராதமும் பெற்று தர உதவியாக இருந்த ஆத்தூர் காவல் நிலைய பெண் முதல் நிலை காவலர் திருமதி. பொன்முத்துமாரி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நீதிமன்ற விசாரணையில் இருந்துவந்த போக்சோ வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 10,000/- மும் பெற்று தர உதவியாக இருந்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் முதல் நிலை காவலர் திருமதி. மகேஸ்வரி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நீதிமன்ற விசாரணையில் இருந்துவந்த போக்சோ வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 20,000/- மும் பெற்று தர உதவியாக இருந்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் செல்வி. முத்துலெட்சுமி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட 3 எதிரிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட சிவில் உரிமை பாதுகாப்பு நீதிமன்றத்தில் 3 எதிரிகளுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் பெற்று கொடுத்த சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் திரு. முத்துராமலிங்கம் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்த தென்பாகம் காவல் நிலைய காவலர் மரிய ஜெகதீஷ் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய காவலர் ஜான்சன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

6 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 40 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்