தங்ககுமார் கார்த்திக்
தூத்துக்குடி – பிப் -09,2023
Newz – webteam
தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது – ரூபாய் 20,000/- மதிப்புள்ள செல்போன் மீட்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று (08.02.2023) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சத்யா நகர் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை தாக்கி அவரிடமிருந்த ரூபாய் 20,000/- மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் தலைமையில் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், பயிற்சி உதவி ஆய்வாளர் செல்வம், சிறப்பு உதவி ஆய்வாளர் கதிரேசன் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, மத்தியபாகம் காவல் நிலைய காவலர் செந்தில்குமார், தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி சிலோன் காலனியைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் தங்ககுமார் (22), தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கார்த்திக் (22) மற்றும் முத்தையாபுரம் கீதா ஜீவன் நகரைச் சேர்ந்த ரஞ்சித் மகன் சக்திவேல் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து மேற்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் மேற்படி எதிரிகளான தங்ககுமார், கார்த்திக் மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 20,000/- மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி தங்ககுமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும், பசுவந்தனை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு என 9 வழக்குகளும், எதிரி கார்த்திக் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் திருட்டு உட்பட 12 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 14 வழக்குகளும், எதிரி சக்திவேல் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகளும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.