திருப்பத்தூர் – ஜன -12,2023
Newz – webteam
வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி.,IPS,மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, தலைமையில் இன்று மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் கணிவுடனும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் சிறப்பாக பணியாற்றிய அம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இராமமூர்த்தி அவர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இதனை தொடர்ந்து திருப்பத்தூர் உட்கோட்டம் குறிசிலாப்பட்டு காவல் நிலையத்தை காவல்துறை துணைத் தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனிருந்தார்.