நெல்லை மாநகரம் – ஜன -24,2023
Newz – webteam
நெல்லை மாநகரம் TVMCH காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கும் விடுதியில் கடந்த மூன்று மாதங்களாக TVMCH மருத்துவ மாணவர்களின் செல்போன் தொடர்ந்து திருட்டு போனதாக பயிற்சி மருத்துவர் பங்கஜ்யாதவ் (21) என்பவரின் செல்போன் மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் இருவரின் செல்போன் உட்பட சுமார் ரூ75,000 மதிப்புள்ள மூன்று செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த TVMCH மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் உதவி ஆய்வாளர் அன்னராஜா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சன்(30) மற்றும் முனியப்பன்(30) இருவரை 24-01-2023ம் தேதியன்று கைது செய்து, மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து எதிரிகளை சிறையில் அடைத்தனர்