திருச்சி – ஜன -29,2023
Newz – webteam
திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்ரியா இ கா ப. திருச்சி மாநகர சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் , பொது மக்களின் நலனை பேணிகாத்து , ரோந்து பணி செய்யவும், தமிழக முதலமைச்சர் முகவரி மனுக்கள், பொது மக்களிடம் நேரடியாக பெறப்படும் மனுகளின் மீது துரித விசாரணை செய்யவும், காவல் அிகாரிகள் மற்றும் ஆளிநருகளுக்கு அறிவுறை வழங்கி வருகிறார். அதனால் காவல் நிலையங்களில் கோப்புகள் சரியாக பராமரிக்கபட்டு , குற்ற சம்பவங்கள் குறைந்து பொது மக்களிடம் நன்மதிப்பை பெற்று வருக்கியது. திருச்சி மாநகரத்தில் உள்ள கோட்டை காவல் நிலையதில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பாக பணிாற்றி பொது மக்களின் புகாரின் மீது சட்ட ரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுத்தும், காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள் முறையாக பராமரிக்கப்பட்டு, வழக்குகளை விரைவாக விசாரணை செய்தும், வழக்கு தொடர்புடைய குற்ற வாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்தும், வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பித்து , வழக்குகளை விரைந்து முடிக்க உறுதுணையாக இருந்தும், காவல் நிலையம் மற்றும் சுற்றுபுறம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்து, காவல் நிலைய எல்கை உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக 2021 ஆண்டுகாண தமிழ்நாடு முதலைச்சரின் மாநில அளவில் சிறந்த காவல் நிலையம் என இரண்டாவது பரிசு கோட்டை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை நடந்த 74 வது குடியரசு தினம் அன்று முதலைச்சர் அவர்களிடம் இருந்து இரண்டாம் இடம் பரிசு கோப்பை கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் பெற்று கொண்டார்.இரண்டாம் இடம் பரிசு கோப்பை பெற்ற கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் ஆளினர்கள் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா இ.கா.ப பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார்