80.5 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் சென்னை நெல்லை மதுரை திருச்சி கமிஷனர்கள் உட்பட 45,போலீஸ்‌‌‌ அதிகாரிகள்‌‌‌ இடமாற்றம்.....

நெல்லை மதுரை திருச்சி கமிஷனர்கள் உட்பட 45,போலீஸ்‌‌‌ அதிகாரிகள்‌‌‌ இடமாற்றம்…..

சென்னை – ஜன -02,2023

Newz – webteam

தமிழகத்தில் 45 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக கூடுதல் செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

போலீஸ் பயிற்சி கல்லூரி ஐ.ஜி. அருண் பதவி உயர்வு பெற்று சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுப்பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு) ஐ.ஜி. ஈஸ்வர மூர்த்தி கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று போலீஸ் அகாடமியிலும், ஐ.ஜி. கல்பனா நாயக், கூடுதல் டி.ஜி.பி.யாகி பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவிலும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

புதுடெல்லியில் உளவு பிரிவில் இணை இயக்குனராக இருந்த ஐ.ஜி. அவி பிரகாஷ், கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஏ.டி.ஜி.பி. வன்னிய பெருமாள், தமிழ்நாடு பொது வழங்கல் காப்பீடு ரேஷன் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சேலம் டி.ஐ.ஜி, பிரவீன் குமார் அபினப் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் கமிஷனராக நியமிக் கப்பட்டுள்ளார். தென் சென்னை இணை கமிஷனராக இருந்த டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மதுரை கமிஷனராகவும், திண்டுக்கல் டி.ஐ.ஜி, ரூபேஷ் குமார் மீனா, ஐ.ஜி.யாகி அமலாக்கத்துறைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் டி.ஜி.பி. சத்யபிரியா, ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி கமிஷனராகி உள்ளார். சி.பி.ஐ., டி.ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர் . நெல்லை ஐ.ஜி. அவினாஸ் குமார் சென்னைக்கும், சென்னை ஐ.ஜி. தமிழ் சந்திரன் பயிற்சி கல்லூரிக்கும், மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார் சென்னைக்கும் மாற்றப் பட்டு ள்ளனர். திருச்சி கமிஷனர் கார்த்திகேயன் மத்திய மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் பதவி உயர்வு பெற்று கோவை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் பதவி உயர்வு பெற்று சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராகி உள்ளார். டி.ஐ.ஜி. துரை பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் ஐ.ஜி.யானார்.

ஆவடி துணை கமிஷனர் மகேஷ் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருப்பூர் துணை கமிஷனர் அபினவ் குமார் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் டி.ஐ.ஜி.யானார். தாம்பரம் துணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று தென்சென்னை இணை கமிஷனராகி உள்ளார். சி.பி சி.ஐ.டி. சூப்பிரண்டு ஜியா உல்கக், சீருடை பணியாளர் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார் டி.ஐ.ஜி ஆகி உள்ளார். கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நிர்வாகப்பிரிவு ஏ.ஐ.ஜி. சாந்தி, கோவை துணை கமிஷனர் மூர்த்தி, சென்னை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், விருதுநகர் எஸ்.பி. மனோகர், என்.ஐ.ஏ. எஸ்.பி.தர்மராஜன், டெல்லி சூப்பிரண்டு சமந்த் ரோகன் ராஜேந்திரா ஆகியோர் டி.ஐ.ஜி.க்களாகி உள்ளனர்.

சென்னை மேற்கு மண்டல இணைக் கமிஷனர் ராஜேஸ்வரி, சேலம் டிஐஜியாகவும், ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மயில் வாகனன் சென்னை போக்குவரத்து பிரிவுக்கும், சென்னை போக்குவரத்துப் பிரிவு இணைக் கமிஷனர் ராஜேந்திரன், நெல்லை போலீஸ் கமிஷன ராகவும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை நகர துணை கமிஷனர் ஷியாமளா தேவி, பெரம்பலூர் எஸ்.பி.யாகவும், பெரம்பலூர் எஸ்.பி. மணி தாம்பரத்துக்கும், மதுரை துணை கமிஷனர் மோகன் ராஜ் கள்ளக் குறிச்சிக்கும், மதுரை துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் விருதுநகருக்கும், சென்னை எஸ்.பி. சாய் பிரனீத் மதுரைக்கும், சிவகங்கை எஸ்.பி. செந்தில் குமார், திருச்சி ரெயில்வேக்கும், திருச்சி ரெயில்வே எஸ்.பி. அதிவீர பாண்டியன், தாம்பரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பி. ரோஹித் மயிலாப்பூர் துணை கமிஷனரானார். சென்னை சிசிபி துணை கமிஷனர் மீனா, தலைமையகத்துக்கும், தி.நகர் துணை கமிஷனர் ஆதர்ஸ் பச்சன், ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்