சென்னை – ஜன -12,2023
Newz – webteam
23 வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டிகள், சென்னை
(09.01.2023 முதல் 13.01.2023)
23 வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியை சென்னை, வண்டலூரில் உள்ள காவல் உயர் பயிற்சியக கவாத்து மைதானத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.செ.சைலேந்திர பாபு இ.கா.பா., 09.01.2023 தேதி தொடங்கி வைத்தார் இப்போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர், மத்திய காவல் அமைப்பினர் என சுமார் 700 துப்பாக்கி கடும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியின் நான்காம் நாளான இன்று (12.01.2023) 50 கஜம் கார்பைன் துப்பாக்கி சுடுதல்
நீலிங் பிரிவில், இந்தோ திபத் எல்லை பாதுகாப்பு படை வீரர் விஷால் குமார் முதல் இடத்தையும்,
எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் ஹேன்டிக்யு இரண்டாவது இடத்தையும் மற்றும் தேசிய
பாதுகாப்பு படை வீரர் ராம்ஸ்வரூப் சஹாரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
50 கஜம் கார்பைன் துப்பாக்கி சுடுதல் புரோன் சினாப் பிரிவில், இந்தோ திபத் எல்லை
பாதுகாப்பு படை வீரர் விஷால் குமார் முதல் இடத்தையும், ஆந்திர மாநில காவல்துறையைச்
சார்ந்த சந்தோஷ் குமார் இரண்டாவது இடத்தையும் மற்றும் உத்திரபிரதேச மாநில
காவல்துறையைச் சார்ந்த ஜெய் சந்து சர்மா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
நடைபெற்று முடிந்த அனைத்து கார்பைன் துப்பாக்கி சுடுதல் பிரிவு போட்டிகளில், இராஜஸ்தான் மாநில காவல்துறை முதல் இடத்தையும், மத்திய ரிசர்வு காவல் படை இரண்டாம் இடத்தையும் மற்றும் தமிழ்நாடு காவல்துறை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன, போட்டியிட்ட வீரர்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் ஹேன்டிக்யு முதல் இடத்தையும், ஆந்திர மாநில காவல்துறையைச் சார்ந்த சந்தோஷ் குமார் இரண்டாம் இடத்தையும் மற்றும் இராஜஸ்தான் மாநில காவல்துறையைச் சார்ந்த ஹேட்ராம் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
நடைபெற்று முடிந்த அனைத்து வகையான துப்பாக்கி கடுதல் பிரிவு போட்டிகளில், அசாம் ரைபில் படை முதல் இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை இரண்டாம் இடத்தையும் மற்றும் மத்திய ரிசர்வு காவல் படை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. மாநிலங்கள் அளவில், தமிழ்நாடு காவல்துறை முதல் இடத்தையும், இராஜஸ்தான் காவல்துறை இரண்டாம் இடத்தையும் மற்றும் ஒடிசா காவல்துறை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
நடைபெற்று முடிந்த ரைபில், கார்பைன் மற்றும் பிஷ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.செ.சைலேந்திர பாபு இ.கா.பா., இன்று பதக்கங்களை வழங்கினார்
நாளை மாலை சென்னை இராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறவுள்ள
விழாவில் தமிழ்நாடு முதல்வர் வெற்றிபெற்ற மாநில காவல்துறையினர்
மற்றும் மத்திய காவல் அமைப்பினர்களுக்கு கோப்பைகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கான
பதக்கங்களை வழங்கி கௌரவிப்பார்