திருச்சி – ஜன -23,2023
Newz – webteam
பொதுமக்களின் புகார் மனுக்களை அலட்சியம் செய்து வரும் காவல்துறையினர் என விமர்சனம் வரும் நிலையில், பணியில் சேர்ந்த ஐந்து மாதத்தில் 977சதவிகித புகார் மனுக் களுக்குத் தீர்வு காணச் செய்து முதல்வரையே வியக்க வைத்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் 32 வயதான இளம் டி.எஸ்.பி யாஸ்மின். குரூப் -1 தேர்வெழுதி துணை போலீஸ் சூப்பிரன் டண்டன்ட் பணிக்கு நேரடியாக தேர்ச்சி பெற்ற இவர் திருச்சி மாவட்டம் முசிறி சரகத்தின் முதல் பெண் டி.எஸ்.பியாக ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத் தின் கீழ் பெறப்பட்ட 1,400 புகார்களில் 1,367 புகார் களுக்கு தீர்வு கிடைக்கச் செய்திருக்கிறார். சீனியர், ஜூனியர் என பாரபட்சம் பார்க்காமல் துறையில் அனைவரையும் மதிப்புடன் நடந்தும் யாஸ்மின் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடமும் கனிவுடன் நடக்கத் தவறுவதில்லை. முதல்வரே போனில் அழைத்து பாராட்டியது இந்த காரணங்களுக்காகத்தான்.