திருவாரூர் – ஜன – 08,2022
Newz – webteam
திருவாரூர் மாவட்ட
ஆயுதப்படையில் இயங்கிவரும் காவலர் அங்காடி Smart Canteen மற்றும் திருவாரூர் நகர காவலர் குடியிருப்பை காவல் கண்காணிப்பாளர் திடிர் ஆய்வு மேற்கொண்டார்
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., இன்று திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் இயங்கிவரும் காவலர் அங்காடியினை (Smart Canteen) திடிர் ஆய்வு செய்து காவலர் அங்காடியில் காவலர்களின் குடும்பங்களுக்கு அனைத்து பொருட்களும் தடையில்லாமல் கிடைக்கிறதா என ஆய்வு செய்தார். அதோடு எல்லா பொருட்களும் எப்போதும் கிடைக்க வேண்டும் என காவலர் அங்காடியில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், அளிநர்களுக்கும் அறிவுரைகள் வழங்கினார். பின்னர் திருவாரூர் நகர காவலர் குடியிருப்பிற்கு சென்று ஆய்வு செய்து அங்குள்ள காவலர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் காவலர் குடியிருப்பினை சுத்தான முறையில் வைத்துகொள்ள வேண்டும் எனவும், குடியிருப்பு வளாகத்தினை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் அறிவுரை வழங்கினார்