தூத்துக்குடி – ஜன -25,2023
Newz – webteam
மேல்நிலைப்பள்ளி படிப்பில் 2022ம் ஆண்டில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி பரிசுத்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வழங்கினார்.
காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் வாரிசுகளில் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களுக்கு முதல் இடம் பிடித்தவருக்கு ரூபாய் 7,500/-ம், இரண்டாம் பிடித்தவருக்கு ரூபாய் 5,500/-ம், மூன்றாம் இடம் பிடித்தவருக்கு ரூபாய் 3,500/-ம் 4 முதல் 10வது வரை உள்ள இடங்களை பிடித்தவர்களுக்கு ரூபாய் 2,500/-ம் வழங்கப்படும். அதன்படி 2022ம் ஆண்டில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி பரிசுத்தொகையை இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வழங்கினார்.
இந்த கல்வி பரிசுத்தொகை தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிவரும் அமைச்சுப்பணி உதவியாளர் கிருஷ்ணம்மாள் மகள் லதா சுப்பிரியா, உதவி ஆய்வாளர் மாரியப்பன் மகள் மதுமிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மகன் ஜெயவிக்னேஷ், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியன் மகள் ஆர்த்தி, மொகைதீன் அலி மகன் சரோத் ஜகான், சீனிவாசன் மகள் ஹரிணி, முத்துகிருஷ்ணன் மகள் அங்காள பரமேஸ்வரி, சிறப்பு உதவியாளர் சந்தனராஜ் மகள் புஷ்கலா தேவி, தலைமை காவலர்கள் வடிவேல் மகள் ரேஷ்மதி மற்றும் தங்கமாரியப்பன் மகன் ஹரிஹரன் ஆகியோருக்கு கல்வி பரிசுத்தொகையை இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வழங்கி,
அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார்.
இந்நிகழ்வின்போது காவல்துறை அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் மயில்குமார், உதவியாளர் அனிதா கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.