திண்டுக்கல் – ஜன – 19,2023
Newz – webteam
கீழே கிடந்த நகைகளை காவல் நிலையத்தில் ஓப்படைத்தவருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் பாராட்டு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை உட்கோட்டம் வத்தலக்குண்டு காவல் சரகம் பழைய வத்தலக்குண்டு தெற்குத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் (45), த.பெ. சண்முகம் என்பவர் கடந்த 18.01.2023-ம் தேதி தனது வேலையை முடித்து வீட்டிற்கு செல்லும் வழியில் பழைய வத்தலக்குண்டு பிரிவு அருகே கீழே கிடந்த பையை எடுத்து பார்த்த போது அதில் 12 சவரன் தங்க நகைகள் இருப்பதை பார்த்து உடனே பையை வத்தலக்குண்டு காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தியதில் மேற்படி நகைகள் கட்டக்காமன்பட்டியைச் சேர்ந்த கெளதம் என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டறிந்து இன்று (19.01.2023) இருவரையும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து மேற்படி நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக கார்த்திக்-ன் நேர்மையை பாராட்டி அவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.