திருப்பத்தூர் – ஜன -28,2023
Newz – webteam
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தருண் என்பவர் கிழிந்த காலணியுடன் பயிற்சி செய்து கொண்டிருந்தான் அங்கு உடற்பயிற்சிக்காக வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே.எஸ். பாலகிருஷ்ணன் அந்த சிறுவனை அழைத்து புதிய காலணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கி முடிந்து போனதை கனவாக எடுத்துக் கொள் நடக்கப் போவதை சவாலாக எடுத்துக் கொண்டு நன்றாக பயிற்சி செய்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும்படி வாழ்த்து கூறினார்