திருப்பத்தூர் – ஜன -21,2023
Newz – webteam
கல்நார்சாம்பட்டி பாதுகாப்பு பணியில் காயமடைந்த ஆயுதப்படை காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 25,000 வழங்கினார். இதில் திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் கணேஷ், ஆயுதப்படை காவல்துணை கண்காணிப்பாளர் விநாயகம், தனிப்பிரிவு ஆய்வாளர் ரஜினி குமார், கந்திலி காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.