அரியலூர் – ஜன -13,2023
Newz – webteam
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை குடும்பத்துடன் பொங்கல் திருநாளை கொண்டாடினார்கள்
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் 13.01.2023 இன்று காவல்துறை சார்பில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ச்சியினை கொண்டாடினார்
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சிறுமிகள் என தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இந்நிகழச்சியில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காமராஜ் , அரியலூர் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன் முன்னிலை வகித்தார்கள். அரியலூர் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பத்மநாபன் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
இதேபோன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். உடன் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி , சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வாணி , மாவட்ட குற்றப்பிரிவு ஆவணகாப்பக காவல் ஆய்வாளர் அனிதா ஆரோக்ய மேரி அவர்கள் மற்றும் காவலர்கள் இருந்தனர்.