நெல்லை மாநகரம் – ஜன -26,2023
Newz – webteam
நெல்லை மாநகரம் டவுண் பகுதியில் நடுரோட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி பொதுமக்களுக்கு பீதியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்திய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாநகரம் 16-01-2023ம் தேதியன்று குற்றால ரோட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி பொதுமக்களுக்கு பீதியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்திய புட்டரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பரின் மகன் இசக்கிமாரி(30) மற்றும் கோவில்பட்டி ஆவுடையம்மாள்புரம், தெற்கு தெருவை சேர்ந்த அஜித்குமார்(27) ஆகியோர் மீதுபிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர்.K.சரவண குமார் அவர்கள்,டவுன் சரக காவல் உதவி ஆணையாளர் விஜயகுமார் மற்றும் டவுண் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் S.இராஜேந்திரன் இ.கா.ப உத்தரவின் படி, மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை டவுண் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்