73.6 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி போதைபொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் புதிதாக பொறுப்பேற்ற மத்திய மண்டல ஐஜி உறுதி....

போதைபொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் புதிதாக பொறுப்பேற்ற மத்திய மண்டல ஐஜி உறுதி….

திருச்சி – ஜன -05,2022

Newz – webteam

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. கார்த்திகேயன், இ.கா.ப இன்றைய தினம்‌‌‌ பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவும், அதற்கு முன்பு திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையராகவும் மிக சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். மேலும் கோவை சரக காவல்துறைதுணைத்தலைவராகவும் 2016-ம் ஆண்டில் பணியாற்றியுள்ளார்.
மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கேற்ப போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திட 2023-ம் ஆண்டில் அதிக முக்கியத்துவம் தரப்படும் என்றும், கஞ்சா, குட்கா மற்றும் இதர போதைப் பொருட்களை கடத்துதல், பதுக்குதல், சட்ட விரோதமாக விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார். பொதுமக்கள், காவல் நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அளிக்கும் புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மணல் கடத்தல், சட்டவிரோதமாக சாராய விற்பனை, லாட்டரி விற்பனை போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். இணையதள மோசடிக் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்
சட்ட விரோத மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுதல் ஏற்படுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரௌடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளார்

சாலை விபத்துக்களை குறைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். காவல்துறை தலைவரை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் வேலை நாட்களில் தினமும் பிற்பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை காவல்துறை தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்