திருநெல்வேலி – ஜன -09,2023
Newz – webteam
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்குபரிசுத்தொகை வழங்கி பாராட்டு.
2020-2021 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையினர் குழந்தைச் செல்வங்களை ஊக்குவிக்கும் வகையில், அரசால் வழங்கப்படும் பரிசுத் தொகையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப , இன்று குழந்தைகளுக்கு வழங்கி பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் அவர்கள் குறிக்கோள்கள் வெற்றியடைவும், சிறந்த துறையை தேர்ந்தெடுத்து அதில் மென்மேலும் பல சாதனைகள் புரியவும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.