நெல்லை மாநகரம் – ஜன -10,2023
Newz – webteam
கடந்த 06.01.2023 ஆம் தேதிமாலை சுமார் 6 மணியளவில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் ரவுண்டானா வழியாக பாளையங்கோட்டைக்கு பைக்கில் அதி வேகமாகவும், ஜாக்கிரதையாகவும், பொதுமக்களுக்கு பயத்தையும் ஏற்படுத்தும் விதமாக இரண்டு இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக மோட்டார் வாகனங்களில் சென்றதாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. உடனடியாக அந்த இரு சக்கர வாகனங்களை பிடித்து சட்டபடியான நடவடிக்கை எடுக்கும்படி காவல் துணை ஆனையாளர் (கிழக்கு) அவர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள். அதன் பேரில் பாளையங்கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் .பிராங்கிளின் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினர் கடந்த இரண்டு நாட்களாக வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் ரவுண்டானா முதல் சீனிவாச நகர் வரை உள்ள சி.சி.டி.வி. பதிவுகளையும், வண்ணார்பேட்டை முதல் தச்சநல்லூர் சுப்புராஜ் மில் செக் போஸ்ட் வரை உள்ள கிட்டதட்ட 70 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி களை ஆய்வு செய்தும், நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை விசாரணை செய்தும், போக்குவரத்து விதிகளை மீறிய ஆறு நபர்களையும் அடையாளம் கண்டு, TN 72 BM 2422 என்ற வாகனத்திற்கு (Triple riding Rs.1000, Without Helmet Rs. 1000,Pillion Rider Rs.1000, Using Motor vehicle for Racing on Public Road w/o Proper Permission Rs.5000, Offence of Without DL Rs.10,000,Driving causing person excessive speed Rs.1000, Allowing unauthorised person to drive Rs.5000, Driving at exessive speed Rs.1000, Disobedience of order of authority Rs. 2000 Total – Rs-27,000/-) TN BS 4576 (Triple riding Rs.1000, Without Helmet Rs. 1000,Pillion Rider Rs.1000, Using Motor vehicle for Racing on Public Road w/o Proper Permission Rs.5000, Offence of Without DL Rs.10,000, Driving causing person excessive speed Rs.1000, Driving at exessive speed Rs.1000, Disobedience of order of authority Rs. 2000, Total Rs.22,000./- ) இரண்டு புல்லட் வாகனங்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டு போக்குவரத்து விதி ஆகிய மீறிய குற்றத்திற்காக அவர்களுக்கு மொத்தம் ரூபாய் 49,000/-ம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் மானவர்களின் பெற்றோர்களை அழைத்து தக்க அறிவரை கூறியும் மாணவர்களை கடுமையாக எச்சரித்தும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை.
இது போன்ற போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பாராட்டு
சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாநகர காவல் ஆணையாளர் பாரட்டுக்களை தெரிவித்தார்