நெல்லை மாநகரம் – ஜன -21,2023
Newz – webteam
திருநெல்வேலி மகாராஜா நகர் மூன்றாவது தெருவை சார்ந்த தங்கப்பன் அவர்களின் குமாரர் மரிய ராஜன் பூர்விகா மொபைலில் ₹ 11,499 கொடுத்து புதிய செல்போன் 14-8-2017 அன்று வாங்கியுள்ளார்.
செல்போன் வாங்கிய தினத்திலிருந்து சரியான முறையில் வேலை செய்யாமல் ஸ்கிரீன் சுருங்கி சுருங்கி ,ஹேங்க் ஆகி வேலை செய்துள்ளது மறுநாளே பூர்விகா மொபைலில் செல்போனை மாற்றித் தருமாறு கேட்டுள்ளார்
விற்பனை செய்த செல்போனை மாற்றி தர பூர்விகா நிர்வாகம் மறுத்துவிட்டது
செல்போனை சர்வீஸ் சென்டர் கொடுக்குமாறு தெரிவித்துள்ளது மனுதாரரும் சர்வீஸ் சென்டரில் கொண்டு கொடுத்துள்ளார்
சர்வீஸ் சென்டரில் போனை வாங்கி வைத்து விட்டு மேலும் மனுதாரரை ரூபாய் 11000/- செலுத்தினால் சரி செய்து தர முடியும் என்று தெரிவித்துளள்ளார்கள்
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்ட மனுதாரர் வழக்கறிஞர் பிரம்மா மூலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் வழக்கானது விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு(ஸ்ரீவில்லிபுத்தூர்(இ)) மாற்றம் செய்யப்பட்டது இதனை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர்(இ) விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் சேகர்மற்றும் சாந்திஆண்டியப்பன் மற்றும் சௌந்தர் ராஜன் ஆகிய உறுப்பினர்கள் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 10,000/- நஷ்டஈடு ஆகவும் வழக்கு செலவு 5000 ரூபாயும் மனுதாரரின் செல்ஃபோன் விலையான ரூபாய் 11,499/-க்குநாளது தேதி முதல் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்