81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் முன் பகை காரணமாக வீடுபுகுந்‌‌‌து அரிவாளால்‌‌‌ வெட்‌‌‌டி ஒருவர் கொலை 3,பேர் கைது...

தூத்துக்குடியில் முன் பகை காரணமாக வீடுபுகுந்‌‌‌து அரிவாளால்‌‌‌ வெட்‌‌‌டி ஒருவர் கொலை 3,பேர் கைது மாவட்ட எஸ்பி அதிரடி….

தூத்துக்குடி – ஜன – 29,2023

Newz – webteam

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை – 3 எதிரிகள் உடனடியாக கைது.

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு கே.டி.சி நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் கருப்பசாமி (26) என்பவரை நேற்று (28.01.2023) வடக்கு சங்கரப்பேரி மேலத்தெருப் பகுதியில் உள்ள அவரது உறவினரது வீட்டில் வைத்து மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்; (பொறுப்பு). சம்பத் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசாருக்கு சம்மந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன்களான கருப்பசாமி (எ) கர்ணன் (26), உத்தண்டு (எ) ரமேஷ் (31) ஆகியோர் தங்களது வீட்டின் முன்பு காரை சுத்;தம் செய்து கொண்டிருந்தபோது, கொலையுண்ட கருப்பசாமி தனது நண்பர்களுடன், அவர்களுக்கு மிக அருகில் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால் கருப்பசாமி என்ற கர்ணன் அவர்களை முறைத்துப் பார்த்துள்ளார், நீ எப்படி எங்களை முறைத்துப் பார்க்கலாம் என்று அவர்களுக்குள் கைகலப்பு ஏற்படுகிறது, இதனை தொடர்ந்து மேற்படி கொலையுண்ட கருப்பசாமி, அவரது அத்தை வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து கருப்பசாமி என்ற கர்ணணையும், அவரது சகோதரர் உத்தண்டு (எ) ரமேஷ் ஆகிய இருவரையும் வெட்டியுள்ளார், பின் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர். அதன் பிறகு காயமடைந்த கருப்பசாமி என்ற கர்ணன் ஆத்திரத்தில் அவரது உறவினர்களுடன் கொலையுண்ட கருப்பசாமி அத்தை வீட்டிற்குச் சென்று, அங்கிருந்த கருப்பசாமியை அரிவாளால் தாக்கியுள்ளனர், இதில் கருப்பசாமி அங்கேயே இறந்துவிட்டார், அப்போது அவருடன் இருந்த அவரது நண்பர் உத்தண்டு முருகன் காயமடைந்துள்ளார், காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சங்கரப்பேரியைச்சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் 1) வீரபாண்டி என்ற ரவீந்திரன் (40/23), அவரது தம்பி 2) முத்துராஜ் (35/23) மற்றும் ஸ்டேட் பாங்க் காலணியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் 3) வேலுச்சாமி (24) ஆகியோரை கைது செய்துள்ளனர். இதில் சம்மந்தப்பட்ட மற்ற எதிரிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்