80.5 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில்‌‌‌ 5,பேர் மீது குண்டாஸ் மாவட்ட எஸ்பி அதிரடி....

“தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில்‌‌‌ 5,பேர் மீது குண்டாஸ் மாவட்ட எஸ்பி அதிரடி….

தூத்துக்குடி – ஜன -13,2023

Newz – webteam

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப நடவடிக்கை.

கடந்த 25.12.2022 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் ராம்குமார் (44) மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் (39) ஆகியோரை குடும்ப பிரச்சினை காரணமாக அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகேசன் (47) மற்றும் இவரது மகன் மகேஷ் (19) ஆகியோரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரகளான முருகேசன் மற்றும் மகேஷ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராம் அவர்களும்,

கடந்த 30.11.2022 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பாரதி நகர் பூங்கா அருகில் வைத்து தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த சங்கரன் மகன் பெரியநாயகம் (60) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த நல்லக்கண்ணு மகன் பழனிக்குமார் (39), தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் ஆனந்தராஜ் (எ) ஆனந்த் (28) மற்றும் சிலரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி வழக்கின் எதிரியான பழனிக்குமாரை கடந்த 28.12.2022 அன்று கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட நிலையில், மற்றொரு எதிரியான ஆனந்தராஜ் (எ) ஆனந்த் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் அவர்களும்,

கடந்த 18.12.2022 அன்று ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் ஆழ்வார்திருநகரி அண்ணாநகரை சேர்ந்த பால்ராஜ் மகன் முனியாண்டி (42) என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான முனியாண்டி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. லெட்சுமி பிரபா அவர்களும்,

கடந்த 29.12.2022 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு to கலியாவூர் பகுதியில் ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முறப்பநாடு கலியாவூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துகல்யாணி (21) என்பவரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான முத்துகல்யாணி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் அவர்களும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த கருப்பசாமி மகன் 1) முருகேசன் மற்றும் அவரது மகன் 2) மகேஷ், தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் 3) ஆனந்தராஜ் (எ) ஆனந்த், ஆழ்வார்திருநகரி அண்ணாநகரை சேர்ந்த பால்ராஜ் மகன் 4) முனியாண்டி மற்றும் முறப்பநாடு கலியாவூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் 5) முத்துகல்யாணி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 5 எதிரிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்