80.5 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் போலியான வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் 37,லட்சம் மோசடி செய்‌‌‌த நைஜீரிய வாலிபர்...

தூத்துக்குடியில் போலியான வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் 37,லட்சம் மோசடி செய்‌‌‌த நைஜீரிய வாலிபர் மும்பையில் கைது தனிப்‌‌‌படை போலீசாருக்‌‌‌கு மாவட்ட எஸ்பி பாராட்டு….

தூத்துக்குடி – ஜன – 01,2022

Newz – webteam

தூத்துக்குடியில் போலியான வாட்ஸ்அப் எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்து அதன் மூலம் ஏமாற்றி ரூபாய் 37 லட்சம் பண மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எதிரி கைது – எதிரியை கைது செய்த சைபர் குற்றப் பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு.

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த செலஸ்டின் மகன் பனிமய க்ளாட்வின் மனோஜ் (38) என்பவருக்கு அவரது மொபைலில் வாட்ஸ் அப் மூலம் டோகோவில் இருக்கும் Vetis Animal Health Industry என்ற நிறுவனத்திற்கு மருந்து ஏற்றுமதி செய்ய இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சர்மா எண்டர்பிரைசஸ் இருந்து பெற்று மேற்படி வெட்டிஸ் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்யுமாறு கேட்டதை நம்பி ரூபாய் 36,98,800/- பணத்தை அனுப்பி ஏமாற்றப்பட்டதாக மேற்படி பனிமய கிளாட்வின் மனோஜ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

மேற்படி புகார் மனு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. லயோலா இக்னேசியஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைத்து எதிரிகளை கைது செய்து பணத்தை மீட்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் நைஜீரியா நாட்டை சேர்ந்த இஷி பெடிலிஸ் நுடுபியூஸி (Eze Fidelis Ndubuisi) (42) என்பவர் வாட்ஸ் அப் மூலம் போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்தும் போலியான வாட்ஸ்அப் எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரி இஷி பெடிலிஸ் நுடுபியூஸி (Eze Fidelis Ndubuisi) என்பவரை மும்பை சென்று மும்பையில் உள்ள உல்வே நோட் என்ற பகுதியில் வைத்து கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் மேற்படி எதிரி இதுபோல் பல நபர்களை ஏமாற்றி உள்ளதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்று பலர் இந்த மோசடியில் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கானது தொடர்ந்து விசாரணையில் உள்ளது.

மேற்படி எதிரியை கண்டுபிடித்து கைது செய்த சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்