கன்னியாகுமரி – ஜன -14,2023
Newz – webteam
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட ஆயுதப்படையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . D.N. ஹரி கிரன் பிரசாத் IPS தலைமையில் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து இன்று பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.
இந்த பொங்கல் விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கலிட்டு, பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்
மேலும் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள், சிறுமிகள் என தனித்தனியாக பிரித்து அனைவருக்கும் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன . விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசு பொருட்களை வழங்கினார்கள்.
இந்த பொங்கல் விழாவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் அவர்கள் , ஆயுதப்படை துணை காவல் கண்கணிப்பாளர் சேம் வேதமாணிக்கம் மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர் . சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொங்கல் விழாவின் இறுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.