தூத்துக்குடி – ஜன -09,2022
Newz – webteam
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்த தூத்துக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவர் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவர்கள் அடங்கிய கலைக்குழுவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.
தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா இறுதிப் போட்டிகள் மதுரையில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கடந்த 27.12.2022 அன்று முதல் 29.12.2022 அன்று வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் கரகாட்டம், ஒயிலாட்டம், கணியன் கூத்து, கோலாட்டம், குழு நடனம் உட்பட 17 வகை நடன போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்தும் 600க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 3000 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு ஆங்கில செய்யுள் ஒப்புவித்தலில் 7ம் வகுப்பு மாணவர் சஞ்சித் ஈஸ்வரர் என்பவர் மாநிலத்தில் முதலிடமும், மேற்படி பள்ளி சார்பில் கலந்து கொண்ட மேற்கத்திய நடன குழுவினர் மாநில அளவில் 2ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
மேற்படி பள்ளி கல்வித்துறை கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களை இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
இந்நிகழ்வின்பாது தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரீடா, ஆசிரியர்கள் . ஹேனா, பவானி, ஜெனிதா, வசந்தி, மற்றும் வேல்மாரி ஆகியோர் உடனிருந்தனர்.