திருநெல்வேலி – ஜன -02,2022
News – webteam
மாநில அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருநெல்வேலி மாவட்ட போலீசாருக்கு பாராட்டு.
தென்காசி மாவட்டம், அய்யாபுரம் , பகுதியில் மாநில அளவிலான கபாடி போட்டி, 30.12.2022 மற்றும் 31.12.2022 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள் உட்பட 67 அணிகள் பங்குபெற்றன. மேற்படி போட்டியில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த இரண்டாம்நிலை காவலர்கள் .நாகமணி,அஷின்ராஜ், வெற்றிவேல்,.சிவகாமி செல்வன், முத்துராஜா அடங்கிய கபாடி அணியினர் சிறப்பாக விளையாண்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தனர்.
மேற்படி பரிசு பெற்ற காவலர்கள் இன்று வெற்றி கோப்பையுடன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, அறிவுரைகள் வழங்கி ஊக்குவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் மகேஸ்வரி, ஆகியோர் உடனிருந்தனர்.