கன்னியாகுமரி – ஜன -11,2023
Newz – webteam
40 வது தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் வெற்றி பெற்ற உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
40 வது தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றது.
இதில் உதவி ஆய்வாளர்.திலீபன் triple jump போட்டியில் தங்க பதக்கமும், உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கமும், முதல் நிலை காவலர் டேவிட் ஜான் அவர்கள் 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும் பெற்று மாவட்ட காவல் துறைக்கு பெருமை சேர்த்தனர்.
மேற்கண்ட தடகள போட்டிகளில் வென்ற உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. N. ஹரி கிரன் பிரசாத் IPS இன்று வெகுவாக பாராட்டினார்.