தூத்துக்குடி – ஜன – 13,2023
Newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வரவேற்பாளர்களாக (Receptionist) பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சீருடை வழங்கி அறிவுரை.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போது மரணமடைந்த காவல்துறை மற்றும் அமைச்சுப்பணி அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வரவேற்பாளர்களாக (Receptionist) தமிழ்நாடு அரசு பணி நியமனம் செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 28 பேர் வரவேற்பாளர்களாக பணி நியமனம் செய்ய்பட்டு, அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று (13.01.2023) சீருடை வழங்கி, காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க ஆவண செய்யுமாறு அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது காவல்துறை பண்டக அலுவலக அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் அந்தோணியம்மாள், அமைச்சுப்பணி அலுவலர் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.