வேலூர் – ஜன -08,2023
Newz – webteam
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல்நிலைய எல்லைக்குட்பட்பெங்களூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலை, வசூர் ஊத்துக்கோட்டை அம்மன் கோயில் எதிரே இன்று 08/01/2023 மாலை சுமார் 4.45 மணியளவில் ஏற்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் அவற்றில் பயணம் செய்த 7 வயது ஆண் குழந்தை மற்றும் அக்குழந்தையின் தந்தையும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இரண்டு நபர்களும் பலத்த காயமடைந்தனர். அப்போது அவ்வழியாக சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த IT நிறுவனத்தில் பணிபுரியும் திருமதி.கீதா க/பெ அஸ்மதுல்லா என்பவரும் அவரது 16 வயது மகனும் வாணியம்பாடி திருமண வரவேற்பில் கலந்துகொண்டு அவர்களது காரில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தளர்கள், விபத்தை பார்த்து உடனே எவ்வித தயக்கமும் இன்றி விபத்தில் காயமடைத்த 7 வயது குழந்தையை மீட்டு காலதாமதமின்றி முதலுதவி சிகிச்சை வழங்கியுள்ளனர். அந்நேர்வில் அவ்வழியாக வந்த வேலூர் சரக துணைத்தலைவர் டாக்டர். M.S.முத்துசாமி. இ.கா.ப., மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன், இ.கா.ப. ஆகியோரும்் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தும், காயமடைந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மேற்சொன்ன.கீதா அவர்களே அக்குழந்தையை விரைவாக இரத்தினகிரி, CMC மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அரசு வாகனத்தில் உடனே அவர்களை ஏற்றி அனுப்பிவைத்து காயமடைந்த குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இவ்விபத்தில் சிக்கிய காயமடைந்த குழந்தையை தன்னுடைய சொந்த குழந்தை போல் கருதி முதலுதவி சிகிச்சை அளித்து, அவருடைய கரங்களிலேயே சுமந்து சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த திருமதி.கீதா அவர்களின் தாய்மை உணர்வை பார்த்த காவல்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் திருமதி.கீதா அவர்களை வெகுவாக வியந்து பாராட்டினர் . மேலும் காபமடைந்த குழந்தையின் உடல்நலம் குறித்து தெரிவிக்குமாறு கூறிவிட்டு திருமதி. கீதா அவர்கள் மருத்துவமனையிலிருந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து வேலூர் சரக துணைத்தலைவர் டாக்டர்.M.S.முத்துசாமி. இ.கா.ப., மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன். இ.கா.ப அவர்களும்கீதா அவர்களை விபத்து நேரத்தில் உதவிய ‘GOOD SAMARITAN’ என்று பாராட்டியும், அவர்களை போலவே விபத்துக்களில் காயமடைந்தவர்களை பொன்னான நேரமான ‘Golden Hour’-வில் காலதாமதமின்றி மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ப்பதன் மூலம் விலைமதிப்பில்லாத மனித உயிரை காப்பாற்றலாம் என்று தெரிவித்துக்கொண்டனர்.