கன்னியாகுமரி – ஜன -05,2022
Newz – webteam
பள்ளி மாணவ மாணவிகள், தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ, மற்றும் போதை பொருள் சம்பந்தப்பட்ட தகவல்களை அளிக்க மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டி
பள்ளி மாணவ மாணவிகள், தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது போதை பொருள் சம்பந்தப்பட்ட ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, தகவல் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N.ஹரி கிரன் பிரசாத் IPS மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்க உத்தரவிட்டு உள்ளார்.
இம்முயற்சியின் தொடக்கமாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று நாகர்கோயில் எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்ட புகார் பெட்டியை திறந்து வைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் போதைப் பொருட்களை விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் 7010363173 என்ற எண்ணுக்கு whatsapp மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது புகார் பெட்டி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்