நெல்லை மநகரம் – ஜன – 13,2023
Newz – webteam
அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு மேல் படிப்பிற்கான கல்வி உதவித் தொகை வழங்கி பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகள் கடந்த 2020-2021ஆண்டில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 13-01-2023 ம் தேதியன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் S.இராஜேந்திரன் இ.கா.ப . மேல் படிப்பிற்கான கல்வி உதவித் தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார்