கோயம்புத்தூர் – ஜன -29,2023
Newz – webteam
“ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் மைல்கல்… காவலர்களை கௌரவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…”
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., கடந்த 2022 ஜூன் மாதம் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு திட்டமான ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள மொத்தம் 60 Women Help Desk Officer கள் மூலம் இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 1208 பள்ளிகளில், 3561 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், 1,90,000 பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
இதனை பாராட்டும் விதமாக இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் வைத்து ஒவ்வொருகாவல் நிலையங்களிலும் Women Help Desk Officer ஆக நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கியும், Badge -களும் வழங்கப்பட்டன. அதில் அதிகப்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய காவல் நிலையமாக பெரிய நாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு கேடயம் வழங்கியும், மேற்படி காவல் நிலையங்களில் சிறப்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய பெண் காவலர்கள் கௌசல்யா, மீனா பிரியா, பிரேமா மற்றும் சரிதா ஆகியோர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்து உற்சாகப்படுத்தினார். மேலும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் எதிரொலியாக வழக்குகள் பதிவு செய்வதற்கு உந்துகோளாக இருந்த காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியானது கோவை மாவட்ட காவலர்களிடமும் காவல் அதிகாரிகளிடமும் பெரிதும் வரவேற்பை பெற்றது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு கடுமையாக நடவடிக்கை எடுத்தும், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் நோக்கமே கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான எந்த ஒரு குற்றங்களும் நடவாமல் தடுப்பது மற்றும் அவர்களை அக்குற்றங்களிலிருந்து பாதுகாப்பது மற்றும் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க 1098 என்ற எண்ணிலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.