திருப்பத்தூர் – ஜன – 25,2023
Newz – webteam
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பட்டா மாறுதல் லஞ்சம் கேட்ட கிராம நிருவாக அலுவலர் அவரை கையும் களவுமாகப் பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம் பள்ளி அருகே மல்லு குண்டான் பகுதியை கபிலன் தன் அப்பா பெயரில் உள்ள பட்டா தன் பெயர் மாற்றம் செய்வதற்கு மல்லு குண்டான் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் என்பவரிடம் சென்று உள்ளார். அவர் மாற்றம் செய்ய லஞ்சம் 3000 கேட்டு உள்ளார். இவர் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி அவர்களிடம் தெரிவிக்க லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஆறு பேர் கொண்ட குழு மல்லு குண்டான் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கையும் களவுமாகப் பிடித்தனர்