75.2 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி எஸ்பி தலைமையில் ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகம் கூட்‌‌‌டம்‌‌‌ இன்‌‌‌று நடைபெற்‌‌‌றது....

தூத்துக்குடி எஸ்பி தலைமையில் ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகம் கூட்‌‌‌டம்‌‌‌ இன்‌‌‌று நடைபெற்‌‌‌றது….

தூத்துக்குடி – ஜன -03,2022

Newz – webteam

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையினருக்கு ‘ஸ்மார்ட் காவலர் செயலி” குறித்த அறிமுக கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாட்டில் காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பாராமரிக்கவும் தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர் செயலி“ காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து இன்று முதற்கட்டமாக தூத்துக்குடி நகரம் மற்றும் ஊரக உட்கோட்ட காவல்துறையினருக்கு ‘ஸ்மார்ட் காவலர் செயலி”யை செல்போனில் பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த அறிமுக கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த செயலி காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும் அவற்றை பராமரிக்கவும், தரவுகளை முறையாகவும் சிறப்பாகவும் கையாளவும் காவல்துறையினருக்கு ஏதுவாக இருக்கும். மேலும் இந்த செயலி காவல்துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி தேவை ஏற்பட்டாலோ இதுகுறித்த செய்தியினை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும்,

மேலும் தங்களுடைய காவல் நிலையத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சட்டவிரோத செயல்கள் நடவாமலும், புகார் அளிக்க வரும் பொதுமக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை அறிந்து அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு ‘மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி, அதன் மூலம் குற்றமில்லாத தூத்துக்குடி மாவட்டமாக உருவாக்கி சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வரவேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; டாக்டர் எல். பாலாஜி சரவணன் காவல்துறையினருக்கு எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சி.சி.டி.என்.எஸ் காவல் உதவி ஆய்வாளர் விக்டோரியா அற்புதராணி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்