திருவாரூர் – ஜன -24,2023
Newz – webteam
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குற்ற ஆய்வுகூட்டம் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் .G.கார்த்திகேயன்,இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டதில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் T.ஜெயச்சந்திரன்,இ.கா.பா., திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., திருவாரூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் K.வெள்ளத்துரை மற்றும் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். நடைபெற்ற இக்கூட்டதில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சட்டம் ஒழுங்கு பற்றிய அறிவுரைகளை அத்துடன் நிலுவை வழக்குகள் குறித்தும் ஆய்வு செய்தார்