தூத்துக்குடி – ஜன -10,2023
Newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள பசுபதி பாண்டியன் 11ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலங்காரதட்டில் உள்ள பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் நாளை (10.01.2023) நடைபெற உள்ள 11ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 10 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர், 20 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 60 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் இன்று மாலை தாளமுத்துநகர் ஆண்ட்ரூஸ் மஹாலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்கணிகாப்பாளர் திரு. கார்த்திகேயன் உட்பட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், விளாத்திகுளம் காவல் உதவி கண்காணிப்பாளர் . ஸ்ரேயா குப்தா இ.கா.ப, திருச்செந்தூர் ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் மாயவன், மணியாச்சி லோகேஸ்வரன், கோவில்பட்டி வெங்கடேஷ், சாத்தான்குளம் அருள், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், மாவட்ட குற்ற ஆவண கூட பிரிவு பொன்னரசு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிவசுப்பு உட்பட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.