திருச்சி – டிச – 22,2022
Newz – webteam
திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் திறப்பு.
திருவரங்கம் அருள்மிகு
அரங்கநாதசுவாமி
திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி
திருவிழாவானது இந்த வருடம் 23.12.2022ம்தேதி முதல் 01.01.2023ம்தேதி வரை பகல் பத்து
திருவிழானாகவும், 03.01.2023ம்தேதி முதல் 12.01.2023ம்தேதி வரை
இராபத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. 02.01.2023ம்தேதி அதிகாலை 4.45மணிக்கு பரமபதவாசல் திறக்கபடவுள்ளது
மேற்கண்ட திருச்சி மாநகரின் மிக முக்கியமான திருவிழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் ரெங்கவிலாஷ் மண்டபம் அருகில் காவல்துறை சார்பில் புறக்காவல் அமைக்கப்பட்டு, இன்று மாலை 500 மணிக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் .G.கார்த்திகேயன், இ.கா.ப திறந்து வைக்கப்பட்டது. திறப்புவிழாவின்போது திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் இந்து அறநிலைய துறை இணை ஆணையர் செயல் ஆணையர் மாரிமுத்து மற்றும் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, ஸ்ரீரங்கம் சரக உதவி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டர்
திருச்சி மாநகர காவல் ஆணையர் கூறுகையில், கடந்த 2 வருடங்களாக கொரோனா காலகட்டம் என்பதால் பக்தர்கள் வருகை மிக குறைந்த அளவு மட்டுமே இருந்தது. இந்த வருடம் சுமார் 2லட்சம் பக்தர்கள் தரிசத்திற்கு வருகைபுரியவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சுமார் 3000 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள். போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல போக்குவரத்து காவலர்கள் அதிக அளவில் பணி நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சீராக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 117 CCTV கேமராக்களும், கோவிலை சுற்றி வெளிபுறத்தில் 92 CCTV கேமராக்கள் மொத்தம் 209 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்ட்டு வருகிறது. மேலும் ஒலிபெருக்கி அமைக்கப்ட்டு பொதுமக்களுக்கு அவ்வபோது அறிவிப்பு செய்து தகவல் தெரிவிக்க முன்னேற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்