சென்னை – ஆவடி – டிச – 16,2022
Newz – webteam
3 தற்காலிக புறக்காவல் நிலையங்களை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய்ரத்தோர் திறந்து வைத்தார்.
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் தொலைதூர மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் சமூக காவல்துறையின் ஒரு பகுதியாக காவல்துறையினரை பொதுமக்கள் எந்நேரத்திலும் அணுகக்கூடிய நிலையினை அதிகரிக்க 3 தற்காலிக புறக்காவல் நிலையங்களை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய்ரத்தோர் சோழவரம் காவல் நிலைய எல்லை அட்டந்தாங்கள், வெள்ளவேடு காவல் நிலைய எல்லை திருமழிசை மற்றும் திருமுல்லைவாயில் காவல் நிலைய அயப்பாக்கம் எல்லையிலும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். 3 புற காவல் நிலையங்களிலும் ஒவ்வொரு காவல் நிலையங்களில் இருந்து 2 காவல் உதவி ஆய்வாளர்கள் புறக்காவல் நிலையத்தில் அலுவலில் நியமிக்கப்படுவார்கள் எனவும் புறக்காவல் நிலையத்தில் பெறப்படும் மனுக்களுக்கு மனு ரசீது வழங்கி விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும் எனவும் 24 மணி நேரமும் புறக்காவல் நிலையம் செயல்படும் எனவும் புற காவல் நிலையத்தில் வரவேற்பு பணியில் உள்ள காவலர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.