தூத்துக்குடி – டிச – 28,2022
Newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான தகவல் பதிவு உதவியாளர்/வரவேற்பாளர் (Data Entry Assistant/Receptionist) பணியாணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணி அலுவலர்கள் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மூலம் காவல்துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர்/வரவேற்பாளர் (Data Entry Assistant/Recepionist) பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது. மேற்படி அரசு பணியாணையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
தமிழக காவல்துறையில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் மனைவி சுமதி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பால்துரை மகன் பிரவான், தலைமைக் காவலர் பாலசுப்பிமணியன் மகள் சுருதிலெட்சுமி ஆகிய 3 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பணியாணையை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட காவல்துறை அலுவலக அமைச்சுப்பணி உதவியாளர் கிருஷ்ணம்மாள் உடனிருந்தனர்.