தூத்துக்குடி – டிச – 20,2022
Newz – webteam
தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பாக கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 75 பேருக்கு புத்தாடைகளை தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வழங்கினார்.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பாக இன்று தூய்மை பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 75 பேருக்கு புத்தாடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ், பொருளாளர் கணேசன், மாவட்ட செயலாளர் மார்க் மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் . முத்துகிருஷ்ணன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உட்பட காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட மாதா குடிபோதை தடுப்பு இயக்குனர் ஜெய்கர், ராஜா ஸ்டாலின், சாம்ராஜ்,குணசிங், பரத், அகஸ்டீன், சொக்கலிங்கம்.முத்துகுமார், ஹரிஹரன், ராஜா மற்றும் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.