தூத்துக்குடி – டிச -17,2022
Newz -webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் அலுவலகங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி இன்று தூய்மைப்படுத்தும் பணி – வடபாகம் காவல் நிலையம் மற்றும் வடபாகம் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற காவல்துறையினரின் தூய்மைப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் குறிப்பாணையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், அலுவலகங்கள், ஆயுதப்படை மற்றும் குடியிருப்புகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்குமாறு அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், நிலைய பொறுப்பு அதிகாரிகள் உட்பட காவல்துறை ஆளினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறைக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் இன்று காவல்துறையினரின் தூய்மைப்பணி மேற்கொண்டு காவல் வளாக பகுதிகளில் மரக்கன்று நட்டனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் மற்றும் வடபாகம் காவல் நிலைய குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று கொண்டிருந்த தூய்மைபடுத்தும் பணிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது வடபாகம் காவல்துறையினர் உடனிருந்தனர்