தூத்துக்குடி – டிச -14,2022
Newz – webteam
தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன்பிடி துறைமுகம் பகுதி உட்பட பல இடங்களில் கஞ்சா விற்பனை குறித்து நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன்பிடி துறைமுகம் உட்பட பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த சிறப்பு ரோந்தின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர் . சிவக்குமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.