தென்காசி – டிச -19,2022
Newz -webteam
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் துறையினரின் துரித நடவடிக்கையால் தொலைந்த மற்றும் தவறவிட்ட ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான 75 செல்போன்கள் மீட்கப்பட்டது.
மேற்படி மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் இன்று தென்காசியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். மேலும் செல்போன்களை தவறவிட்ட நபர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் – 1930 என்ற உதவி எண்ணை அணுக வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.