சென்னை – டிச -20,2022
Newz – webteam
தமிழ்நாடு காவல்துறையின் பெண் தலைமை காவலருக்கு தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது
கடந்த 15.12.2022 அன்று புதுடில்லியில் நடைபெற்ற தேசிய குற்ற ஆவணக் காப்பகம் விருது வழங்கும் விழாவில் திருநெல்வேலி மாவட்டம் குற்ற ஆவண காப்பகத்தில் பணிபுரிந்து வரும் பெண் தலைமை காவலர் தங்கமலர் மதிக்கு காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளின் தரவுகளை ஆராய்ந்து ஒப்பீடு செய்து அடையாளம் காணப்படாத 19 பிரேதங்களின் அடையாளம் கண்டறிந்தமைக்காகவும், பல்வேறு இடங்களில் காணாமல் போன 16 இருசக்கர வாகனங்களை குற்ற ஆவணங்களை ஆராய்ந்து அவற்றை மீட்டு வழக்குகளில் முன்னேற்றம் காண உதவியதற்காகவும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பெண் தலைமை காவலர் .தங்கமலர் மதியை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, இ. கா. ப., டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்