அரியலூர் – டிச -21,2022
Newz – webteam
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், வாரந்தோறும் சிறப்பு பொதுமக்கள் குறைதீர் முகாம்
தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின்படி, வாரந்தோறும் புதன்கிழமைகளில் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறும்.அதன் அடிப்படையில் இன்று புதன்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் சிறப்பு தனிக்குழு மூலம் குறை தீர்வு முகாம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.முகாமில் 36 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காரணம் கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,
ரவி சேகரன் (சைபர் கிரைம்), காமராஜ் (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்,
வெங்கடேசன் அவர்கள்(SJHR),
சுரேஷ்குமார் அவர்கள்(DCRB), காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் 36 மனுதாரர்கள் பங்கேற்றனர்.