நெல்லை மாநகரம் – டிச – 14,2022
Newz – webteam
பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொது மக்களின் புகார் மனுக்களை பெற்று விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் புதன்கிழமைகளில் நடத்தப்பட்டுவந்த நிலையில், கூடுதலாக
இம்மாதத்தின் இரண்டாவது புதன் கிழமையும் 14-12-2022 ம் தேதியன்று நடைபெற்றது. இம்முகாமில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப புகார் மனுக்களை பெற்று அதன் விபரங்களை கேட்டறிந்து புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்கும் என காவல் ஆணையாளர் அவர்கள் கூறினார்கள். உடன் நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.சீனிவாசன் அவர்கள், நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் K.சரவண குமார் அவர்கள் நெல்லை மாநகர தலைமையிட காவல் துணை ஆணையாளர் G.S.அனிதா ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். குறை தீர்க்கும் முகாமில் 8 பேர் கலந்து கொண்டு புகார் மனுக்களை காவல் ஆணையாளர் அவர்களிடத்தில் அளித்தார்