நெல்லை மாநகரம் – டிச -21,2022
Newz – webteam
பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொது மக்களின் புகார் மனுக்களை பெற்று விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
இம்மாதத்தின் மூன்றாவது புதன் கிழமை இன்று 21-12-2022 ம் தேதியன்று நடைபெற்றது. இம்முகாமில் புகார் மனுக்கள் மீது இதுவரை தீர்வு கிடைக்காத நபர்கள் 16 பேர் மற்றும் புதியதாக 22 பேர் மொத்தம் 38 பேர் கலந்து கொண்டு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப புகார் மனுக்களை அவர்களிடத்தில் அளித்தார்கள். மனுக்களை பெற்று அதன் விபரங்களை கேட்டறிந்து புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்கும் என காவல் ஆணையாளர் அவர்கள் கூறினார்கள். உடன் நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் , நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் K.சரவண குமார் அவர்கள் மற்றும் மாநகர குற்ற ஆவண காப்பக காவல் உதவி ஆணையாளர் சரவணன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டார். மேலும் அனைத்து சரக உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் உதவி ஆய்வாளர்களை வரவழைத்து தீர்வு காணப்படாத மனுக்களை பற்றி ஆலோசித்து விரைவில் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்