80.5 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை மாவட்டத்தில் அனைத்து நவீன வசதிகள் அடங்கிய காவல்நிலையம்‌‌‌ திறப்‌‌‌பு மாவட்ட எஸ்பி...

நெல்லை மாவட்டத்தில் அனைத்து நவீன வசதிகள் அடங்கிய காவல்நிலையம்‌‌‌ திறப்‌‌‌பு மாவட்ட எஸ்பி குத்‌‌‌துவிளக்‌‌‌கேற்‌‌‌றி துவங்கி வைத்தார்

திருநெல்வேலி – டிச -30,2022

Newz – webteam

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வசதிகளும் உடைய நவீன முறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள மானூர் காவல் நிலைய திறப்பு விழாவில் சிறப்பாக பணியாற்றி மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவியால் ரிப்பன் வெட்டி திறப்பு.

30.12.2022

திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலையத்தின் புதிய கட்டிடத்தை இன்று தமிழக முதல்வர், அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள மானூர் காவல் நிலையத்தின் கட்டிடத்தை, மானூர் காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றி புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருந்து உடல் நலக்குறைவால் மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் என்பவரின் மனைவி மல்லிகா மூலம் ரிப்பன் வெட்டி புதிய காவல் நிலையம் திறக்கப்பட்டது. பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப.குத்து விளக்கேற்றி வைத்து காவல் நிலைய சுற்றுபுறங்களை பார்வையிட்டு காவல் துறையினருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மானூர் காவல் நிலையம், மாவட்டத்தில் முதன் முறையாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு என்று தனி கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், எதிரிகளை அடையாளம் காணும் விதமாக சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுத வைப்பு அறை, கோப்பு அறை, கணினி அறை மற்றும் ஆண் காவலர்கள், பெண் காவலர்களுக்கென்று தனி ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் அவர்கள், மானூர் காவல் ஆய்வாளர் .சபாபதி , உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர், மானூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மன், மானூர் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்